பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லோகாயன் 2026 – இந்தியக் கடற்படைக் கப்பலான சுதர்ஷினி, பார்சிலோனா துறைமுகப் பயணத்தை நிறைவு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 6:00PM by PIB Chennai

இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்ஷினி, லோகாயன் 26 பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்பெயினின் பார்சிலோனா துறைமுகத்தில் மேற்கொண்டிருந்த பயணத்தை 2026 செப்டம்பர் 6 அன்று நிறைவு செய்தது.

 

இந்தப் பயணத்தின்போது, கப்பலின் கடற்படை அதிகாரி, ஸ்பெயின்  கடற்படையின் மூத்த அதிகாரிகளுடனும், கடல்சார் நிர்வாகத் தரப்பினருடன் தொழில்முறை ரீதியான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். கப்பலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மூத்த கடற்படை அதிகாரிகள், தூதரகப் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர்.

 

இந்தக் கப்பலைச் சுற்றிப் பார்க்க  பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் மூலம், இந்திய வம்சாவளியினரும், உள்ளூர் மக்களும் கப்பல் குழுவினர் , பயிற்சி பெறுநர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினர். இந்தியாவிற்கும், ஸ்பெயினுக்கும் இடையிலான நீண்டகாலக் கடல்சார் உறவுகளை கப்பலின் வருகை மீண்டும் உறுதிப்படுத்தியது. அத்துடன், தொழில்முறை சார்ந்த, கலாச்சார ரீதியிலான பரிமாற்றங்களுக்கு இது வாய்ப்பளித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு, ஒத்துழைப்புக்கான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தியது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2307601&reg=3&lang=1

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2307692) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी