சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விரிவுரையாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் பட்டியல் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டுப் பலன்கள் மறுக்கப்பட்டது தொடர்பான புகார்: பஞ்சாப் கல்வித் துறையிடம் விளக்கம் கேட்கிறது என்சிஎஸ்சி

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2026 7:29PM by PIB Chennai

பஞ்சாப் கல்வித் துறையில் விரிவுரையாளர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமல்படுத்தப்படவில்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு தருண் சுக் தாக்கல் செய்திருந்த புகார் மனு தொடர்பான விவகாரம் குறித்து தேசிய பட்டியல் வகுப்பினருக்கான ஆணையமான என்சிஎஸ்சி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்ட 1,013 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில், பட்டியல் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டின் பலன்கள் மறுக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பஞ்சாப் அரசின் தலைமைச் செயலாளருக்கு விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசைப் பெற்ற ஏழு நாட்களுக்குள், அது தொடர்பான விவரங்கள், குற்றச்சாட்டுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307017&reg=48&lang=1 

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2307038) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी