சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

ஜிப்மரில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2026 3:14PM by PIB Chennai

ஜிப்மர் சார்பில் ஆசிரியர் தினம் மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்பட்டது. தலைமுறைகளை உருவாக்குவதிலும், எதிர்காலச் சுகாதாரத் துறை வல்லுநர்களை உருவாக்குவதிலும் ஆசிரியர்களின் மதிப்புமிக்க பங்களிப்பைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனத்தின் முன்னாள் சிறப்புப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

இந்நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின்  பேராசிரியர் டாக்டர் பியூஷ் குப்தா தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார். புதுதில்லிப் பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் ஏ.எஸ். பெயிண்டல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி மற்றும் மூத்த ஆசிரியர்கள் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவினரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ஜிப்மரின் முன்னாள் ஆசிரியர்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். நிறுவனத்தின் வளமான கல்வி மரபை உருவாக்கியதிலும், அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மருத்துவ வல்லுநர்களை உருவாக்கியதிலும் அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இக்கௌரவிப்பு நடைபெற்றது.

  

தமது உரையில், ஜிப்மர் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, ஜிப்மரின் கல்விச் சிறப்பையும் நிறுவனத்தின் கல்வித் தனித்துவத்தையும் நிலைநிறுத்துவதில் ஆசிரியர்களின் முக்கியப் பங்கை எடுத்துரைத்தார். ஒரு தலைசிறந்த நிறுவனம் என்பது உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் மூலமாக மட்டுமே உருவாக்கப்படுவதில்லை என்றும், அர்ப்பணிப்புமிக்க ஆசிரியர்களாலேயே அது சாத்தியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜிப்மரில் நடைபெற்ற ஆசிரியர் தினக் கொண்டாட்டம், கற்பித்தல் மற்றும் கற்றலில் சிறப்பை நிலைநாட்டுவதற்கான நிறுவனத்தின் உறுதியை மீண்டும் வலியுறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

****

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2306994) வருகையாளர் எண்ணிக்கை : 36
இந்த வெளியீட்டை படிக்க: English