சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
மதுராந்தகத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற, ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு, மக்கள் தொடர்புத் திட்டம் நிறைவு
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2026 5:43PM by PIB Chennai

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு, பயனாளிகள் பதிவு முகாம் ஆகியவற்றை உள்ளடக்கிய இரண்டு நாள் சிறப்பு 'ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு, மக்கள் தொடர்புத் திட்டம்' வெற்றிகரமாக நிறைவடைந்தது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகமான சிபிசி இதனை ஏற்பாடு செய்திருந்தது. பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முக்கிய நலத்திட்டங்களுக்கு மக்கள் பதிவு செய்வதை எளிதாக்கவும் செப்டம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

2026 செப்டம்பர் 2 அன்று நடைபெற்ற முகாமின் தொடக்க விழாவில், மதுராந்தகம் வருவாய் கோட்ட அலுவலர் திரு நரேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சிபிசி-ன் தமிழ்நாடு, அந்தமான் மண்டல இயக்குநர் திரு ஜெ காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை, அஞ்சல் துறை, மக்கள் மருந்தக மையங்கள், பொதுச் சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைத் திட்டங்கள் சார்பில் சிறப்புக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

2026 செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில், ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் காகிதப் பை தயாரிப்புப் பயிற்சி பெற்றவர்களுக்குப் பயிற்சி நிறைவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கு தொடங்கப்பட்டதுடன், இ-ஷ்ரம் அட்டைகள் வழங்கப்பட்டன.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த முகாமில் மொத்தம் 703 பேர் அரசுநலத் திட்ட சேவைகள் மூலம் பயன் அடைந்தனர்.
***
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306781)
வருகையாளர் எண்ணிக்கை : 14