சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக திரு ஜெ காமராஜ் பொறுப்பேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 SEP 2026 5:14PM by PIB Chennai

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான்-நிக்கோபார் மண்டலத்திற்கான கூடுதல் தலைமை இயக்குநராக திரு ஜெ காமராஜ் இன்று (04.09.2026) பொறுப்பேற்றார். இத்துடன், இம்மண்டலத்திற்கான கூடுதல் பத்திரிகைத் தலைமைப் பதிவாளர் பொறுப்பையும் அவர் கவனிப்பார்.

இந்தியத் தகவல் பணியின் 2008-ம் ஆண்டுப் பிரிவு அதிகாரியான திரு காமராஜ், முன்னதாக இந்திய ரயில்வே போக்குவரத்துப் பணியில் (IRTS) இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின், 2011-ல் புதுதில்லி ஆகாசவாணியின் செய்திப் பிரிவில் உதவி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். 2013-ல், புதுதில்லி டிடி நியூஸ் தொலைக்காட்சியின் துணை இயக்குநராகப் பொறுப்பேற்றார். இதைத்தொடர்ந்து, 2014-ல் டிடி தமிழ் (பொதிகை) தொலைக்காட்சியில் துணை இயக்குநராக இணைந்த அவர், 2016 முதல் அதன் செய்திப் பிரிவின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.  பின்னர் 2018-ல் புதுதில்லி ஆகாசவாணி செய்திப் பிரிவின் இணை இயக்குநர் பணிக்கு பின், 2020-ல் மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மண்டல இணை இயக்குநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட திரு காமராஜ், 2021 முதல் அதன் இயக்குநராகப் பணியாற்றினார். 2024-ல் சென்னை ஆகாசவாணியின் மண்டல செய்திப் பிரிவு இயக்குநராக பணியாற்றிய அவர் 2025 ஜூலையில் மத்திய மக்கள் தொடர்பகத்தின் இயக்குநராக மீண்டும் இணைந்தார்.

***

VJ/SS/BR/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2306733) வருகையாளர் எண்ணிக்கை : 63
இந்த வெளியீட்டை படிக்க: English