சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் 2026-ம் ஆண்டிற்கான பசுமை நெடுஞ்சாலைகள் சிறப்பு விருதுகள் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2026 5:37PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலை ஆணையம்  2026 ஆம் ஆண்டிற்கான 'பசுமை நெடுஞ்சாலைகள் சிறப்பு விருதுகளை' அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் மரம் வளர்ப்பு மற்றும் சிறந்த பசுமைப் பராமரிப்பை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.

 

இந்த விருதுகள் மூன்று முக்கியப் பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன:

 

சாலையோர மரம் வளர்ப்பு: ஆந்திராவின் சிலகலூரிபேட்டை புறவழிச்சாலை (என்எச்-16) முதல் பரிசையும், குஜராத்தின் வதோதரா - கிம் விரைவுச் சாலை இரண்டாம் பரிசையும் பெற்றன. மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி - காரைக்குடி (என்எச்-210) சாலை ஆறுதல் பரிசை வென்றது.

 

மையத்தடுப்பு மரம் வளர்ப்பு: ஹைதராபாத் - யாத்கிரி (என்எச்-163) சாலைப்பகுதி முதலிடம் பிடித்தது.

 

நிலப்பகுதிகளில் மரம் வளர்ப்பு: நாக்பூர் ஜம்தா பகுதியில் உள்ள ஆக்சிஜன் பறவைகள் பூங்கா (என்எச்-44) முதல் பரிசைப் பெற்றது.

 

நாடு முழுவதிலுமிருந்து பெறப்பட்ட 86 விண்ணப்பங்களில், நடப்பட்ட மரங்களின் பிழைப்பு விகிதம் , உள்நாட்டு மர வகைகளின் பயன்பாடு, மற்றும் பராமரிப்பு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டன.

 

2015 பசுமை நெடுஞ்சாலைகள் கொள்கையின்படி, 2025 ஆம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்போடு நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அர்ப்பணிப்பை இது காட்டுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2306409&reg=3&lang=1

செய்திக்குறிப்பு அடையாள எண்: 2306409

****

SS/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306597) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी