தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 5:56PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் 2026 ஆகஸ்ட் 4 அன்று பேருந்து ஒன்றில் ஏறிய 16 வயது சிறுமி, பேருந்தின் ஓட்டுநராலும் நடத்துநராலும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்தி ஒன்றை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. தகவலின்படி, குற்றவாளிகள் அச்சிறுமிக்குக் கொலை மிரட்டல் விடுத்து, தில்லியில் உள்ள காஷ்மீர் கேட் பேருந்து முனையத்தில் அவரை விட்டுச் சென்றுள்ளனர்.

 

செய்தியின் விவரங்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவை கடுமையான மனித உரிமை மீறல் பிரச்சினைகளை எழுப்புகின்றன என்று ஆணையம் கூறியுள்ளது. எனவே, இவ்விவகாரம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு தில்லி, கௌதம் புத் நகர் காவல் ஆணையர்களுக்கும், மைன்புரி காவல் கண்காணிப்பாளருக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305587&reg=3&lang=1

(Release ID: 2305587)

 

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2306591) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी