சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
திருவண்ணாமலையில் புதிய ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 5:56PM by PIB Chennai

திருவண்ணாமலையில் புதிய ஆதார் சேவை மையத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இன்று தொடங்கியது. இதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பெங்களூரு பிராந்திய அலுவலகத்தின் தமிழ்நாடு பிரிவு இயக்குநர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் திருமதி வந்தனா கார்க் தொடங்கி வைத்தார்.
இந்த ஆதார் சேவை மையத்தில் புதிய பதிவுகள், விவரங்களை பதிவு செய்தல், பயோமெட்ரிக் புதுப்பித்தல், குறைதீர்ப்பு ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொது விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் இந்த மையம் செயல்படும். மேலும், மக்களின் குறைகளுக்குப் பிராந்திய அலுவலகத்தின் மூலம் நேரடியாகத் தீர்வு காணப்படும்.
இந்தப் புதிய மையம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 13 ஆதார் சேவை மையங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இயக்கி வருகிறது. விரைவில் 17 மையங்களை அது திறக்க உள்ளது.
***
SS/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306526)
வருகையாளர் எண்ணிக்கை : 24