சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்புடைய போதைப்பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2026 6:58PM by PIB Chennai

கோலம்பூரில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு 2026 ஆகஸ்ட் 31 அன்று வந்த 62 வயதுடைய மலேசிய பயணி ஒருவரை சுங்கத்துறையினர் தடுத்து சோதனையிட்டனர்.
அவர் கொண்டுவந்த உடைமைகளை சோதனை செய்தபோது, பொட்டலங்கள் இருந்ததையும், அதற்குள் 3,452 கிராம் எடை கொண்ட போதைப்பொருள் இருப்பதையும் கண்டறிந்தனர். கடத்திவரப்பட்ட இந்த போதைப்பொருளின் கள்ளச்சந்தை மதிப்பு சுமார் ரூ.1.20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
1985-ம் ஆண்டு போதை மருந்துகள் மற்றும் மனநலம் சார்ந்த பொருட்கள் சட்டத்தின் விதிகளின் கீழ் சென்னை சுங்கத்துறையினர் அந்தப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்தப் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
***
SS/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306083)
வருகையாளர் எண்ணிக்கை : 20