சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

எலக்ட்ரான் விநாடி வினா 2026-27-ஐ என்டிபிசி நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2026 5:54PM by PIB Chennai

நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி, எலக்ட்ரான் விநாடி வினா 2026–27-ஐ அறிவித்துள்ளது.  லக்னோவில் செப்டம்பர் 5 அன்று பிராந்திய அளவிலான போட்டியுடன் தொடக்க சுற்று தொடங்குகிறது. அக்டோபர் 8 அன்று தேசிய அளவிலான இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 9 பிராந்தியங்களில் இந்த விநாடி வினா நடைபெறவுள்ளது.

சென்னை, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ராய்ப்பூர், மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, நொய்டா ஆகிய 9 நகரங்களில் பிராந்திய அளவிலான சுற்றுகள் 2026 செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறவுள்ளது.

ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெற்றி பெறும் அணிக்கு 60,000 ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 40,000 ரூபாயும், மூன்றாம் இடம் பெறும் அணிக்கு 20,000 ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட உள்ளது. 4-வது முதல் 6-வது இடம் பெறும் அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.8,000 வழங்கப்படுகிறது.  

ஒவ்வொரு பிராந்தியத்திலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 3 தேசிய அளவிலான அரையிறுதியில் பங்கேற்கும். ஒவ்வொரு அரையிறுதியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

தேசிய அளவிலான அரையிறுதிப் போட்டிகள், இறுதிப்போட்டி ஆகியவை என்டிபிசி-யின் மின் மேலாண்மை நிறுவனத்தில் 2026 அக்டோபர் 7, 8-ம் தேதி அன்று நடைபெறும்.  இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக 1,00,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 60,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 40,000 ரூபாயும் ரொக்கமாக வழங்கப்படவுள்ளது. 4-வது, 5-வது மற்றும் 6-வது இடம் பிடிக்கும் அணிகளுக்குத் தலா 16,000 ரூபாயும், இதர 12 அணிகளுக்கு தலா 8,000 ரூபாயும் ரொக்கமாக வழங்கப்படும்.

வணிகம் மற்றும் மேலாண்மை உலகம் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள இப்போட்டி, பொறியியல், மேலாண்மை மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியிலும் இரண்டு பேர் இடம்பெறுவார்கள்.   

***

SS/IR/RJ/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2306011) வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க: English