சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

மத்திய இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல் ஜிப்மர் நிறுவனத்தைப் பார்வையிட்டார் - அறநெறி சார்ந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 7:18PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல், இன்று (01.09.2026) புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனமான ஜிப்மர் நிறுவனத்தைப் பார்வையிட்டார். அப்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு எஸ் செல்வகணபதியும் உடனிருந்தார்.

 

ஜிப்மரின் இயக்குநர் டாக்டர் வீர் சிங் நேகி, அந்நிறுவனத்தின் கல்விசார் சாதனைகள், சுகாதார சேவைகள், முக்கிய உள்கட்டமைப்புகள் குறித்து அமைச்சருக்கு எடுத்துரைத்தார். துறைத் தலைவர் டாக்டர் டி காதம்பரி, ஜிப்மரின் பயன்பாட்டு ஆராய்ச்சி, புத்தாக்கம் குறித்து அமைச்சருக்கு விளக்கினார். மூத்த பேராசிரியர்களுடனான தனது கலந்துரையாடலின் போது, ​​இணையமைச்சர் திரு பாகேல் சுகாதார நிபுணர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். மேலும், அனைத்து உயிரினங்களுக்கும் பரிவு, அறநெறி சார்ந்த பராமரிப்பை வழங்கும், கருணையே மருத்துவப் பயிற்சியின் மையமாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அறநெறி சார்ந்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

பயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய விலங்குகள் இல்ல வசதியைப் பார்வையிட்டார். அமைச்சரின் இந்தப் பயணமானது, தேசிய முன்னுரிமைகளுக்கு இணங்க, நோயாளிகள் பராமரிப்பு, மேம்பட்ட மருத்துவக் கல்வி, நெறிமுறை சார்ந்த அறிவியல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஜிப்மரின் ஒருங்கிணைந்த சேவைகளை எடுத்துக்காட்டியது.

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305775) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English