சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

கடத்தலில் ஈடுபட்ட விமான நிறுவனத்தின் தூய்மைப் பணியாளர்கள் இரண்டு பேரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 7:15PM by PIB Chennai

உளவுத் தகவலின் அடிப்படையில், 2026 ஆகஸ்ட் 30 அன்று துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பணியில் இருந்த இரண்டு தூய்மைப் பணியாளர்களைச் சென்னை சுங்கத்துறையின் அதிகாரிகள் தடுத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒவ்வொரு பணியாளரின் காலணிகளுக்குள்ளும் பொட்டலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

அவற்றை ஆய்வு செய்தும், உருக்கியும், பதப்படுத்தியும் பார்த்ததில், கைப்பற்றப்பட்ட அப்பொருளிலிருந்து 1,640 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் கிடைத்தன. அரசு அங்கீகாரம் பெற்ற தங்கத் தரப் பரிசோதகர் அந்த தங்கக் கட்டிகள் 24 காரட் ஆனவை என்றும், அவற்றின் மதிப்பு ரூ. 2,37,39,000 என்றும் சான்றளித்தார். இதையடுத்து கடத்தப்பட்ட அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் சம்பந்தப்பட்ட இருவரும்  கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். இது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

தங்கள் உடலிலோ அல்லது உடைமைகளிலோ தங்கம் அல்லது பிற தடைசெய்யப்பட்ட பொருட்களை மறைத்து வைத்து கடத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கும் விமான நிலையப் பணியாளர்களுக்கும் சென்னை சுங்கத்துறை கடுமையாக அறிவுறுத்துகிறது. இத்தகைய செயல்கள் சுங்கச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றங்களாகும். இவை கடுமையான தண்டனை நடவடிக்கைகளுக்கும், நீண்ட கால சட்ட விளைவுகளுக்கும் வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.

****

SS/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305726) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English