சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
கல்பாக்கத்தில் பொதுச் சேவைகள் அமைப்பின் 49-வது நிறுவன தின கொண்டாட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 6:25PM by PIB Chennai

மத்திய அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் பொதுச் சேவைகள் அமைப்பான ஜிஎஸ்ஓ, இன்று (01.09.2026) கல்பாக்கம், அனுப்புரம் பகுதிகளில் பல்வேறு நிகழ்வுகளுடன் தனது 49-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.
பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மனின் நினைவாக 'மாமல்லன் விளையாட்டு வளாகம்' எனப் பெயரிடப்பட்டு, அனுப்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்ட விளையாட்டு வசதியை, கல்பாக்கம் இந்திரா காந்தி அணுசக்தி நிலையம் மற்றும் ஜிஎஸ்ஓ இயக்குநர் திரு ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியைக் குறிக்கும் வகையில், கலாச்சார பாரம்பரியம் மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகளைப் பிரதிபலிக்கும் விதமாக ஜிஎஸ்ஓ-வின் பல பிரிவுகளுக்குப் புதிய பெயர்கள் சூட்டப்பட்டன.

கல்பாக்கத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப அமர்வில், திட்டமிடல், கணக்கியல் பிரிவு இயக்குநர் திரு கே. ஆர். சேது ராமன், 1978-ல் தொடங்கப்பட்டதிலிருந்து ஜிஎஸ்ஓ-வின் பயணத்தை விவரித்தார். நிறுவன நாள் உரையாற்றிய திரு ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை, ஜிஎஸ்ஓ வழங்கிய தடையற்ற மருத்துவ, போக்குவரத்து, உள்கட்டமைப்பு ஆதரவைப் பாராட்டினார். ஜிஎஸ்ஓ-வின் ஐம்பதாண்டு கால சேவைகளை ஆவணப்படுத்தும் ஒரு நினைவு நூல் தொகுப்பும் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஊழியர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305684®=3&lang=1
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305705)
வருகையாளர் எண்ணிக்கை : 23