பாதுகாப்பு அமைச்சகம்
குழாய் வழி இயற்கை எரிவாயுவிற்கு விரைவாக மாறுவது குறித்த பயிலரங்கை இந்திய ராணுவம் நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 4:00PM by PIB Chennai
ராணுவத்தளங்களில் குழாய் வழி இயற்கை எரிவாயுவிற்கு (பிஎன்ஜி) மாறும் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில் இந்திய ராணுவம் தில்லி கண்டோன்மென்டில் உள்ள மானக்ஷா மையத்தில் பிஎன்ஜி மாற்றத்திற்கான இணையவழிக் கருத்தரங்கு 2026 என்ற நிகழ்வை நடத்தியது. இது ராணுவம், அரசு நிறுவனங்கள், பெட்ரோலியம் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை வாரியம், பாதுகாப்புத்துறை எஸ்டேட் அமைப்பு, ராணுவப்பொறியாளர் சேவைகள், நகர எரிவாயு விநியோக அமைப்புகள் ஆகியவற்றின் பங்குதாரர்களை ஒன்றிணைத்தது.
ராணுவம் 2026-27-ம் நிதியாண்டில் 41 ராணுவத்தளங்களை பிஎன்ஜி முறைக்கு மாற்றவும் அதைத்தொடர்ந்து சாத்தியக்கூறுடைய மற்ற தளங்களுக்கு அதை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்வில் வெளியிடப்பட்ட ராணுவத்தின் பிஎன்ஜி கையேடு, கட்டமைக்கப்பட்ட மாற்றத்திற்கான நிர்வாகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, செயலாக்க தேவைகளைக் கொண்ட பொதுவான கையேடாக உள்ளது.
இந்த மாற்றத்திற்கான கொள்கை, ஒழுங்குமுறை, நிலம், பணிகள், தொழில்நுட்பம், பாதுகாப்பு, கணக்கியல், திரும்பச்செலுத்துதல் ஆகியவற்றை எதிர்கொள்வது குறித்து இப்பயிலரங்கில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், நகர எரிவாயு விநியோகத் தயார் நிலை, தள நிலையிலான அமலாக்க அனுபவம், பாதுகாப்புத் தேவைகள் ஆகியவை குறித்தும் அமர்வுகள் விவாதித்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305480®=3&lang=1
***
SS/IR/PS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305697)
வருகையாளர் எண்ணிக்கை : 7