சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் அமலாக்கப் பணிக்குழுவின் 138-வது கூட்டம் தில்லியில் நடைபெற்றது
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 3:13PM by PIB Chennai
தேசிய தலைநகர் பகுதி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தர மேலாண்மை ஆணையத்தின் அமலாக்கப் பணிக்குழுவின் 138-வது கூட்டம் 2026 ஆகஸ்ட் 31 அன்று நடைபெற்றது. அப்போது 2026 ஆகஸ்ட் 8 முதல் 23-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகள், ஆய்வுகள், விதிமுறைகளை கடைபிடிக்கும் நிலை ஆகியவைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
16 நாள்கள் காலக்கட்டத்தில் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பறக்கும் படைகள் மொத்தம் 121 ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் கட்டுமானம், இடிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் 10 ஆய்வுகள், தொழில்துறைப் பிரிவில் 56 ஆய்வுகள், டீசல் ஜெனரேட்டர் தொகுப்புகள் தொடர்பான 20 ஆய்வுகள் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305433®=3&lang=1
***
SS/IR/PS/ SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305643)
வருகையாளர் எண்ணிக்கை : 4