குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டில் இந்தியா-டென்மார்க் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு வலுவடைகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2026 12:20PM by PIB Chennai

இந்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திற்கும், டேனிஷ் காப்புரிமை, வர்த்தக முத்திரை அலுவலகத்திற்கும் இடையேயான இந்தியா - டென்மார்க் கூட்டுப் பணிக்குழுவின் 4-வது கூட்டம், 2026 ஆகஸ்ட் 24 முதல் 28 வரை டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெற்றது. குறு, சிறு, நடுத்தரத்  தொழில் நிறுவனங்களின் மேம்பாடு, புத்தாக்கம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் இக்கூட்டம் நடைபெற்றது.

இந்தியாவும் டென்மார்க்கும் தத்தமது குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், புத்தாக்கச் சூழலமைப்புகள் ஆகியவை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், வலுவான அமைப்புச் சார்ந்த ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இந்தக் கூட்டம் ஒரு தளத்தை வழங்கியது. தொழில்நுட்ப வளர்ச்சி, புத்தாக்கம், அறிவுசார் சொத்துரிமை, தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குதல், தொழில்முனைவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

இந்தியக் குழுவினர், டென்மார்க்கில் வணிக மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவை குறித்து, டென்மார்க்கின் தொழில், வணிகம், நிதி விவகாரங்கள் அமைச்சக அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.

டென்மார்க்கிற்கான இந்தியத் தூதர் திரு மனிஷ் பிரபாத், கூட்டுப் பணிக்குழுவின் வெற்றிகரமான செயல்பாட்டையும், இந்தியா-டென்மார்க் ஒத்துழைப்பு வலுவடைந்து வருவதையும் பாராட்டினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305351&reg=3&lang=1

***

SS/PLM/SM 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2305468) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी