மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுச்சேரியில் ரூ.36.49 கோடி மதிப்பிலான மீன்வள உள்கட்டமைப்புத் திட்டங்களை செப்டம்பர் 1 அன்று மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கி வைக்கவுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 6:08PM by PIB Chennai

இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை, பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ் மீன்வள உள்கட்டமைப்புத் திட்டத்தின் தொடக்க விழாவையும், கடல்சார் பொருளாதாரத்தின் கீழ் கூட்டுறவு முறையில் கடற்பாசி வளர்ப்பிற்கான பன்முகத் திறன் மேம்பாட்டு மாநாட்டையும், 2026 செப்டம்பர் 1 அன்று  புதுச்சேரி, காமராஜர் மணிமன்டப்பத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

 

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல், மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாஷ்நாதன், புதுச்சேரி முதலமைச்சர் திரு என் ரங்கசாமி, புதுச்சேரி சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு ஏ அன்பழகன், புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் திரு மல்லாடி கிருஷ்ணா ராவ், புதுச்சேரி வேளாண்மைத்துறை அமைச்சர் திரு ஜி என் எஸ் ராஜசேகரன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் திரு ஏ நமச்சிவாயம், முதலமைச்சரின் ஆலோசகர் திரு ஏ ஜான் குமாரதாஸ், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு வி பி சிவக்கொழுந்து, புதுச்சேரி மக்களவை உறுப்பினர் திரு வி வைத்திலிங்கம், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் திரு எஸ் செல்வகணபதி, புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் சரத் சௌஹான் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

 

 

பிரதமரின் மீன் வளத் திட்டத்தின்  கீழ், நிலையான மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த மீன்வள மேம்பாட்டிற்கான ஒரு முன்மாதிரியாகப் புதுச்சேரி உருவெடுத்து வருகிறது. வளமான கடல்வளங்களையும் துடிப்பான மீனவ சமூகத்தையும் கொண்ட யூனியன் பிரதேசம், நவீன மீன்வள உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைக் கண்டுள்ளது. இதில் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துதல் மற்றும் நல்லவாடு பகுதியில் அதிநவீன மீன் இறங்குதளம் அமைத்தல் ஆகியவை அடங்கும். இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களும், 600-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்களும் பயனடைந்து வருகின்றனர். காரைக்காலில் உள்ள 'புதுமை மற்றும் திறன் மேம்பாட்டு மையம்'  மூலம் கூட்டுறவு அடிப்படையிலான கடற்பாசி வளர்ப்பிலும் புதுச்சேரி முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த மையம் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, குறிப்பாக மீனவப் பெண்களுக்கு நிலையான வாழ்வாதாரங்களை ஊக்குவிக்கிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2305114&reg=3&lang=1

****

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2305255) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी