அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வெப்பத்தை மின்சாரமாக மாற்றுவதில் புதிய முறை சாத்தியமாகியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2026 4:59PM by PIB Chennai
இயற்பியல் பாடங்களில் கூறப்பட்டதை விட கிட்டத்தட்ட ஆயிரம் மடங்கு பெரிய மின்னழுத்தமாக, வெப்பநிலை வேறுபாட்டை மாற்றக்கூடிய ஒரு படிக வடிவ குறைக்கடத்தியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உருவாக்கப்படும் வெப்ப மின்னழுத்தமானது, அயனிக் கூழ்மங்களில் மட்டுமே காணப்படும். திட, குறிப்பாக ஒற்றைப் படிகப் பொருட்களில் இது காணப்படுவதில்லை.
இந்தக் கண்டுபிடிப்பு, புதிய அதிஉணர்திறன் வெப்பநிலை உணர்விகள், குவாண்டம் உணர் கருவிகளுக்கான ஒரு பாதையையும் திறக்கிறது.
இது வெப்பநிலை உணர்வுக் கருவிகள் முதல், வீணாகும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் வெப்பமின்சார ஜெனரேட்டர்கள் வரையிலான தொழில்நுட்பங்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது.
அறிவியல், தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு, ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம், பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து, இதை நிரூபித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305021®=3&lang=1
(Release ID : 2305021)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2305222)
வருகையாளர் எண்ணிக்கை : 10