புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 ஜூன் மாதத்திற்கான சேவை உற்பத்திக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 31 AUG 2026 4:00PM by PIB Chennai

2024-25-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 2026 ஜூன் மாதத்திற்கான 19 துணைத் துறைகளின் சேவைகள் உற்பத்திக் குறியீட்டை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

2026 ஜூன் மாதத்திற்கான சேவைகள் உற்பத்திக் குறியீடும், 2025  ஜூன் மாதத்தை விட 2026 ஜூன் மாதத்தில் அதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி விகிதம் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.  

அதன்படி, மொத்த விற்பனை வர்த்தகத்தின் குறியீடு 122.8 ஆகும். இது 2025 ஜூன் மாதத்தை விட 15.1 சதவீதம் அதிகமாகும். சில்லறை வர்த்தகக் குறியீடு 138 ஆகும். இது 2025 ஜூன் மாதத்தை விட 18 சதவீதம் அதிகமாகும்.

பழுதுபார்ப்பு சேவைகள் துறையின் குறியீடு 120.1 ஆகும். இது 2025 ஜூன் மாதத்தை விட 7.5 சதவீதம் அதிகமாகும். தங்குமிடம் மற்றும் உணவுத்துறையின் குறியீடு 141.2 ஆகும். இது 2025 ஜூன் மாதத்தை விட 10.2 சதவீதம் அதிகமாகும். ரயில் போக்குவரத்துத் துறையின் குறியீடு 105.5 ஆகும். இது 2025 ஜூன் மாதத்தை விட 3.3 சதவீதம் அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304953&reg=3&lang=1

***

SS/IR/LDN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2305116) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी