சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காசியாபாத்தில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் திடீர் ஆய்வு : விதிமீறல்கள் மீது நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 26 AUG 2026 7:13PM by PIB Chennai

தேசிய தலைநகர் பகுதியில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிரான தனது தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் 'ஆபரேஷன் கிளீன் ஏர்' திட்டத்தின் கீழ் நேற்று (25.08.2026) காசியாபாத்தின் லோனி பகுதியில் திடீரென ஆய்வு நடத்தியது. சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை வழிமுறைகளுக்குப் புறம்பாக சட்டவிரோதமாகச் செயல்படும் தொழிற்சாலைகளைக் கண்டறிவதை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

காசியாபாத்தின் லோனியில் உள்ள 28 தொழிற்பேட்டைகளில் ஆய்வுகளை நடத்துவதற்காக, உத்தரப் பிரதேச மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் ஏழு பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டன. இந்த ஆய்வுகளில் பரவலான விதிமீறல்கள் வெளிப்பட்டன. ஆய்வு செய்யப்பட்ட 28 வளாகங்களும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

 

ஆய்வுகளின் போது கண்டறியப்பட்ட முக்கிய மீறல்களில், அங்கீகரிக்கப்படாத எரிபொருட்களைப் பயன்படுத்தியது, தேவையான காற்று மாசுபாடு கட்டுப்பாட்டுக் கருவிகள் இல்லாமல் செயல்படுதல், போதுமான காற்று மாசுபாடு கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பு இல்லாமல் தொழில்துறை நடவடிக்கைகளை நடத்துதல் ஆகியவை அடங்கும்.

 

விதி மீறல்களைக் கருத்தில் கொண்டு 16 தொழில் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

 

தேசிய தலைநகர் பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகள், அனைத்து சுற்றுச்சூழல் விதிமுறைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று ஆணையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2303566&reg=48&lang=1

(Release ID : 2303566)

****

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303575) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी