PIB Backgrounder
வேளாண் நடைமுறைகளை மாற்றி அமைத்தல்: மீள்திறன் கொண்ட இந்தியாவிற்கான விவசாயம்
प्रविष्टि तिथि:
23 AUG 2026 10:23AM by PIB Chennai
இந்தியாவின் பண்ணைகள் வேளாண்மை வளர்ச்சியைத் தக்கவைத்துள்ளன. ஆனால் அவை நீண்டகால உற்பத்தித்திறன் ஆரோக்கியமான மண், மீள்திறன் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சார்ந்தே உள்ளது. மீட்டுருவாக்க வேளாண்மை, மண்ணின் உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தவும், பருவநிலை அழுத்தங்களுக்கு எதிரான மீள்திறனை வலுப்படுத்தவும் ஒரு வழியை வழங்குகிறது. நாடு முழுவதும், விவசாயிகள் இயற்கை வேளாண்மை, வேளாண் காடு வளர்ப்பு, நுண்ணீர்ப்பாசனம், ஒருங்கிணைந்த பண்ணை முறைகள், அறிவியல் ரீதியான மண் மேலாண்மை போன்ற நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். அரசின் ஆதரவு இந்த மாற்றத்தை விரைவுபடுத்தியுள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, இயற்கை வேளாண்மை 8.80 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியதாக உள்ளது. 18.19 லட்சம் விவசாயிகள் அதில் ஈடுபடுபவர்களாக உள்ளனர். மே 2026 நிலவரப்படி, சுமார் 109 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு 'ஒரு துளியில் அதிகப் பயிர்' திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
மீட்டுருவாக்க வேளாண்மையின் அவசியம்:
இந்தியாவின் வேளாண் துறை வலுவான, நிலையான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. 2016-25 நிதியாண்டுகளில், இது 4.45 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய பத்து ஆண்டுகளை விட மிக அதிகம். இந்தச் சாதனை, இத்துறையின் மீள்திறனையும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் தொடர்ச்சியான முயற்சிகளையும் பிரதிபலிக்கிறது. ஆயினும், இந்த வேகத்தைத் தக்கவைக்க, சூழலியல் அடித்தளங்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.
கடும் வெப்ப அலைகள், வறட்சி அல்லது அதிகப்படியான மழை ஆகியவை பல மாத உழைப்பை வீணாக்கிவிடுகின்றன. லட்சக்கணக்கான சிறு, குறு விவசாயிகளுக்கு, மோசமடைந்து வரும் மண் வளம் என்பது நிச்சயமற்ற நிலையை பிரதிபலிக்கிறது.
இங்குதான் மீட்டுருவாக்க வேளாண்மை முக்கியத்துவத்தைப் பெறுகிறது. மண்ணின் உயிர்ச்சக்தியை மீட்டுருவாக்குவதன் மூலமும், சூழல் மண்டலச் செயல்பாடுகளை வலுப்படுத்துவதன் மூலமும், பருவநிலை மாற்றங்களுக்கு எதிரான மீள்திறனை மேம்படுத்துவதன் மூலமும், இது மண், உற்பத்தித்திறன் ஆகியவை சார்ந்த இரண்டு சவால்களையும் எதிர்கொள்கிறது.
மீட்டுருவாக்க வேளாண்மை என்பது மண் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதையும் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதையும் மையமாகக் கொண்ட ஒரு முழுமையான விவசாய அணுகுமுறையாகும்.
நீர் திறனும், வளங்களின் திறனும்:
சொட்டுநீர், தெளிப்புநீர் போன்ற நுண்நீர்ப்பாசன அமைப்புகள், தாவர வேர்களுக்கு நேரடியாக நீரை வழங்குகின்றன. இது நீர் விரயத்தைக் குறைத்து, நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது. பண்ணை அளவிலான நீர் மேலாண்மையை உகந்ததாக்குவதன் மூலம், இந்த அமைப்புகள் பயிர் உற்பத்தித்திறனை அதிகரித்து, வறட்சியையும் நீர் பற்றாக்குறையையும் தாங்கும் திறனை வலுப்படுத்துகின்றன.
பண்ணை இயந்திரமயமாக்கல் என்பது, பல்வேறு பண்ணை செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் தானியங்கி மயமாக்கமாக்கவும் விவசாய இயந்திரங்களையும் உபகரணங்களையும் பயன்படுத்துவதாகும்.
இயற்கை வேளாண்மை என்பது இந்தியாவின் பாரம்பரிய அறிவு முறைகளில் வேரூன்றிய, ரசாயனமற்ற ஒரு வேளாண் அணுகுமுறையாகும். இந்த முறை, உள்ளூர் கால்நடைகளிடமிருந்து பெறப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பீஜாம்ருதம், ஜீவாம்ருதம், கன்ஜீவாம்ருதம், நீமாஸ்திரா, தஷ்பர்ணி போன்ற பண்ணையிலேயே கிடைக்கும் உயிரியல் உள்ளீடுகளைச் சார்ந்துள்ளது.
இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம்:
2024-ல் தொடங்கப்பட்ட தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம், விவசாயிகள் படிப்படியாக இயற்கை வேளாண்மைக்கு மாறுவதற்கு உதவும் வகையில் ஒரு சாதகமான ஆதரவுச் சூழலை உருவாக்குகிறது. இத்திட்டம், ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் வரை, இரண்டு ஆண்டுகளுக்கு, ஏக்கருக்கு ஆண்டுக்கு 4,000 ரூபாய் என்ற விளைச்சல் அடிப்படையிலான ஊக்கத்தொகையை வழங்குகிறது.
ஒரு துளியில் அதிக பயிர்:
ஒரு துளியில் அதிக பயிர் திட்டம் 2015-16-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது, குறிப்பாக சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனம் போன்ற நுண்பாசன அமைப்புகள் மூலம், பண்ணை நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்த உதவுகிறது.
அரசின் முன்முயற்சிகள், விவசாயிகளுக்குப் பெருமளவில் உதவுகின்றன. அதிகமான விவசாயிகள் மீட்டுருவாக்க நடைமுறைகளைக் கடைப்பிடிக்கும்போது, விவசாயம் சுற்றுச்சூழல் ரீதியாக நிலைத்தன்மை வாய்ந்ததாகவும், பொருளாதார ரீதியாகப் பலனளிப்பதாகவும் மாறும். இந்தப் பயணம் ஆரோக்கியமான மண்ணிலிருந்து தொடங்கி, மீள்திறன் கொண்ட பண்ணைகளையும் பாதுகாப்பான வாழ்வாதாரங்களையும் நோக்கி இட்டுச் செல்லும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302428®=3&lang=1
***
SS/PLM/PD
(रिलीज़ आईडी: 2302466)
आगंतुक पटल : 10