பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

25-வது இந்தியா - இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 21 AUG 2026 9:13PM by PIB Chennai

பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறைக்கான நிரந்தரச் செயலாளர் திரு ஜெரெமி பாக்லிங்டன் ஆகியோர் இன்று (2026 ஆகஸ்ட் 21) புதுதில்லியில் நடைபெற்ற 25-வது இந்தியா – இங்கிலாந்து பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தனர். 2035-ம் ஆண்டுக்கான இந்தியா – இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை, பாதுகாப்புத் தொழில்துறை செயல்திட்டம் மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் இரு நாடுகளும் ஆய்வு செய்தன.

கூட்டுப் பயிற்சிகள், திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்தியா - இங்கிலாந்து ஆயுதப் படைகளுக்கு இடையிலான இருதரப்புப் பரிமாற்றங்களை விரிவுபடுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியின் கீழ் பிராந்திய கடல்சார் பாதுகாப்பு சிறப்பு மையத்தை நிறுவுவது உட்பட, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வலுவான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பாதுகாப்பு ஒத்துழைப்பையும், பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்த வழக்கமான கருத்துப் பரிமாற்றத்தையும் இந்தக் கூட்டம் மேலும் வலுப்படுத்துவதாக அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302196&reg=3&lang=1

(Release ID: 2302196)

****

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2302210) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English