சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் நிறுவன நாள் விழா ஆகஸ்ட் 23-ல் கொண்டாடப்படுகிறது
प्रविष्टि तिथि:
21 AUG 2026 3:59PM by PIB Chennai
தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம், தனது 32-வது நிறுவன தினத்தை, வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, தில்லியில் கொண்டாடுகிறது .
இந்நிகழ்ச்சி குறித்து தெரிவித்த தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் துணைத் தலைவர் திரு ஹர்தீப் சிங் கில், மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், சமூக நீதி - அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர்கள் திரு ராம்தாஸ் அதவாலே, திரு பி எல் வர்மா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாகக் கூறினார்.
நாள் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுமார் 900 துப்புரவுப் பணியாளர்கள், மத்திய, மாநில/யூனியன் பிரதேச அரசுகளின் பிரதிநிதிகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காகப் பணியாற்றுவோர் கலந்து கொள்வார்கள் என்று திரு ஹர்தீப் சிங் கில் கூறினார்.
தூய்மைப் பணியாளர்களின் கண்ணியம், நலன், அபாயகரமான மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழித்தல், இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பினரும் தங்களின் குறைகள், பிரச்சனைகள், கோரிக்கைகளைப் பதிவுசெய்து, அவற்றை உரிய காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கு வகை செய்யும் வகையில், தேசிய தூய்மை பணியாளர் ஆணையம் மிஸ்டு கால் வசதிக்கான எண்ணை அறிமுகம் செய்ய உள்ளதாக திரு கில் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301958®=3&lang=1
(Release ID : 2301958)
****
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2302177)
आगंतुक पटल : 7