புவி அறிவியல் அமைச்சகம்
நிலையான கடல்சார் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தின் ஆழ்கடல் மற்றும் மீன்வளங்கள் குறித்த முக்கிய அறிக்கை வெளியீடு
प्रविष्टि तिथि:
20 AUG 2026 7:06PM by PIB Chennai
கடல்சார் உணவுப் பாதுகாப்பு மற்றும் பருவநிலை ஒழுங்குமுறை ஆகியவற்றின் மீது உலகளாவிய கவனம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா தனது பரந்த மற்றும் இதுவரை முழுமையாக ஆராயப்படாத கடல்சார் எல்லைகளை விவரணையாக்குவாத்திலும் நிர்வகிப்பதிலும் ஒரு உறுதியான நடவடிக்கையை எடுத்துள்ளது. கடல்சார் உயிர்வாழ் வளங்கள் மற்றும் சூழலியல் மையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, மத்திய புவி அறிவியல் அமைச்சகம், "இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஆழ்கடல் மற்றும் தொலைதூரக் கடல் மீன்வளங்கள் குறித்த விரிவான தேசிய அறிக்கை"யை வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 2.37 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏறக்குறைய நான்கு தசாப்த கால முன்னோடி கடல்சார் ஆய்வுகளையும், மூன்று தசாப்த கால முறையான கணக்கெடுப்புத் தரவுகளையும் இந்த முக்கிய ஆவணம் ஒருங்கிணைக்கிறது. வெறும் அறிவியல் தரவுக் களஞ்சியமாக மட்டுமின்றி, வளங்களின் மதிப்பீடு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையைப் பேணி, இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கான ஒரு தெளிவான வழிகாட்டு செயல்திட்டத்தையும் இந்த அறிக்கை வழங்குகிறது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், சிஎம்எல்ஆர்இ-ன் முன்னாள் இயக்குநர்களான டாக்டர் பி. மாதேஸ்வரன் மற்றும் டாக்டர் எம். சுதாகர், தலைவர் டாக்டர் ஆர். எஸ். மகேஷ்குமார், ஆழ்கடல் இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் எம். வி. ரமண மூர்த்தி மற்றும் கடல்சார் அறிவியல் துறையைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301667®=3&lang=1
***
SS/BR/KR
(रिलीज़ आईडी: 2301824)
आगंतुक पटल : 9