அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நிலையான உள்கட்டமைப்பிற்கான புதுமையான பொருட்கள் மற்றும் மேம்பட்ட கலப்புப் பொருட்கள் குறித்த பயிலரங்கம்

प्रविष्टि तिथि: 20 AUG 2026 6:33PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் - மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-CRRI) மற்றும் போபாலில் உள்ள சிஎஸ்ஐஆர்-மேம்பட்ட பொருட்கள் மற்றும் செயல்முறை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-AMPRI) ஆகியவை இணைந்து, போபாலில் உள்ள சிஎஸ்ஐஆர்-ஏஎம்பிஆர்ஐ வளாகத்தில் "நிலையான உள்கட்டமைப்பிற்கான புதுமையான பொருட்கள் மற்றும் மேம்பட்ட கலப்புப் பொருட்கள்" குறித்த ஒரு நாள் பயிலரங்கை நடத்தின. ஜூலை 2026 முதல் ஜூலை 2027 வரை நடைபெறும் சிஎஸ்ஐஆர்-சிஆர்ஆர்ஐ-ன் 70-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிலரங்கம், போக்குவரத்து உள்கட்டமைப்பிற்கான வளர்ந்து வரும் பொருட்கள், மேம்பட்ட கட்டுமான நடைமுறைகள் மற்றும் நிலையான மறுசீரமைப்பு தொழில்நுட்பங்கள் குறித்த அறிவுசார் பரிமாற்றத்திற்கான ஒரு தளத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்குதாரர் அமைப்புகள், கல்வி மற்றும் தொழில்துறைகளைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மத்தியப் பிரதேச அரசின் பொதுப்பணித் துறை அமைச்சர் திரு ராகேஷ் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் செயலாளரும் சிஎஸ்ஐஆர்-ன் தலைமை இயக்குநருமான டாக்டர் என் கலைச்செல்வி கௌரவ விருந்தினராக இணையவழியில் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301638&reg=3&lang=1

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2301796) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी