சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்பிசிஎஃப்டிசி சிறுகடன் திட்டத்தின் மூலம் தொழில்முனைவோராக உருவெடுத்த கேரளத்தின் மகளிர் சுயஉதவிக் குழு

प्रविष्टि तिथि: 20 AUG 2026 6:01PM by PIB Chennai

பெண்கள் ஒருங்கிணைந்த தொழில்முனைவு மூலம் நிலையான வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்வதற்குப் போதிய நிதி வசதி இல்லாத நிலை மிகப்பெரிய தடையாக உள்ளது. இத்தகைய தடைகளைக் களையும் வகையில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதி மேம்பாட்டுக் கழகத்தின் (என்பிசிஎஃப்டிசி) சிறுகடன் திட்டம் மகளிருக்கு உதவி வருகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ‘உணர்வு’ மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினரான பீனா, தனது சக உறுப்பினர்களுடன் உணவுத் தயாரிப்புத் தொழிலைத் தொடங்க மூலதனக் குறைபாடு காரணமாக சிரமப்பட்டு வந்தார். இச்சூழலில் 2021-ம் ஆண்டு என்பிசிஎஃப்டிசி சிறுகடன் திட்டத்தின் கீழ் இக்குழுவுக்கு ரூ.5 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. இத்தொகையின் மூலம் தங்களது உணவுத் தயாரிப்புத் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள், மூலப்பொருட்களை வாங்கி 2022-ம் ஆண்டில் தங்களது சொந்த உணவுத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர்.

இக்கடனுதவிக்கு முன்னர், ரூ.1,20,050 ஆக இருந்த இக்குழுவின் ஆண்டு வருமானம், தற்போது ரூ.4,19,564 ஆக உயர்ந்துள்ளது. முறையான நிதியுதவி, கூட்டு முயற்சி ஆகியவை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தற்சார்பையும் நிதிசார் சுதந்திரத்தையும் உறுதிசெய்ய முடியும் என்பதற்கு இக்குழுவின் வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301615&reg=3&lang=1

****

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2301751) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी