சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
போர் வாகனங்கள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்திய ஆயுதப்படைக்கு வழங்கியது
இடுகை இடப்பட்ட நாள்:
18 AUG 2026 5:14PM by PIB Chennai
DPF0.JPG)
சென்னையிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் போர் வாகனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சார்பில் இந்திய ஆயுதப் படைக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட முக்கிய மூன்று தொழில்நுட்பங்களை முறைப்படி இன்று (18.08.2026) ஒப்படைத்தது.
சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்த தொழில்நுட்பங்களைச் சிவிஆர்டிஇ இயக்குநர் திரு ஜெ ராஜேஷ்குமார், ஜிடிஆர்இ இயக்குநர் டாக்டர் எஸ்வி ரமண மூர்த்தி, கடற்படை தலைமையக உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.
CJTH.jpg)
இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமை விருந்தினர் பேராசிரியர் பிரதிக் கிஷோர், உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு உபகரணங்களை தயாரிப்பதற்கானத் திறன், இந்தியாவிடம் இருப்பதாகவும் முக்கிய தொழில்நுட்பங்களைக் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் உருவாக்க சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்துமாறும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் டிஆர்டிஓ, கடற்படைத் தலைமையக உயர் அதிகாரிகள், தொழில்துறைப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
***
SS/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2300975)
வருகையாளர் எண்ணிக்கை : 20