சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழாக் கொண்டாட்டம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 AUG 2026 6:44PM by PIB Chennai
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் மற்றும் பிராந்திய மையங்களில் நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று தேசபக்தி கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர் பி பிரகாஷ் பாபு தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களைப் போற்றிய அவர், தேசிய ஒருமைப்பாடு, ஆராய்ச்சியை முன்னெடுப்பதில் உயர்கல்வி நிறுவனங்களின் முக்கியப் பங்கினை வலியுறுத்தினார்.

ஆராய்ச்சி மாநாடு 2026, புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வு லாஸ்பேட்டை, காரைக்கால், மாஹே, அந்தமானில் உள்ள ஸ்ரீ விஜய புரம் வளாகங்களிலும் நடைபெற்றது.

முன்னதாக, 'ஹர் கர் திரங்கா' பேரணியும், ஆகஸ்ட் 14 அன்று பிரிவினை கொடுமைகள் நினைவு தினமும் கடைப்பிடிக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299958®=6&lang=1
***
SS/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2300168)
வருகையாளர் எண்ணிக்கை : 41