மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசின் டிஜிட்டல் தளங்கள், மக்கள் சேவைகளுக்கான இணையதள பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 1:25PM by PIB Chennai

நம்பகமான, பாதுகாப்பான, பொறுப்புணர்வுடன் கூடிய இணையதளப் பயன்பாட்டை உறுதி செய்வதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் டிஜிட்டல் தளங்கள், மக்கள் சேவைகளுக்கான இணையதளங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சைபர் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு சட்டபூர்வ தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகக் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 70பி-ன் கீழ், இணையவழிப் பாதுகாப்புச் சாரந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தேசிய முகமையாக இந்திய கணினிசார் அவசரகால மீட்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பால் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் இணையதளங்கள் தொடர்பான பாதுகாப்புச் சார்ந்த பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வுகான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணையவழி அச்சுறுத்தல்களைக் கையாலும் வகையில், நாடு தழுவிய ஒருங்கிணைந்த நடவடிக்கையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன்படி, பல்வேறு முகமைகளுக்கிடையே இணையப் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் வகையில் தேசிய இணையதளப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசின் இணையதளச் சேவைகளைப் பாதுகாக்கும் வகையில், சைபர் பாதுகாப்புத் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக அனைத்து அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட வேண்டிய இணையதள இடர்பாட்டு மேலாண்மைத் திட்டத்தை இந்த அமைப்பு உருவாக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299339&reg=3&lang=2  

***

SS/SV/GS/SH  


(रिलीज़ आईडी: 2299545) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali