பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்பாடு: மத்திய இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தகவல்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:15PM by PIB Chennai
பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அவர் அளித்துள்ள தகவலின்படி, 2026 ஜூன் 30 நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 13,066 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 9,541 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 10.96 கிலோமீட்டர் சாலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 1,537 கிராமங்கள் குடிநீர் வசதி பெற அனுமதிக்கப்பட்டு, 1,387 கிராமங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மின்சார வசதி தொடர்பாக 10,847 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 7,025 வீடுகள் மின்சார வசதி பெற்றுள்ளன. 167 பழங்குடியின மக்கள் வசிப்பிடங்கள் தொலைத்தொடர்பு வசதிக்கான இணைப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கான வீட்டு வசதி, குடிநீர், சாலை, மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகிய அடிப்படை வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298814®=3&lang=1
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2299256)
आगंतुक पटल : 5