புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'மிஷன் மௌசம்' திட்டம்: வானிலை முன்னெச்சரிக்கைக் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை

प्रविष्टि तिथि: 13 AUG 2026 2:19PM by PIB Chennai

இந்தியாவை வானிலை மற்றும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராக மாற்றும் நோக்கில் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் 'மிஷன் மௌசம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2025 ஜனவரி 14 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.

2024-25 மற்றும் 2025-26 காலக்கட்டத்திற்கு ரூ.2,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு, 2026-27-ஆம் ஆண்டிற்கு ரூ.1,342.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நவீன டாப்ளர் வானிலை ரேடார்கள், செயற்கைக்கோள்கள், உயர்திறன் கணினிகள், செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் புயல், கனமழை, வெப்ப அலை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாகக் கணிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் வேளாண்மை, மீன்வளம், விமானப் போக்குவரத்து, பேரிடர் மேலாண்மை போன்ற வானிலை சார்ந்த துறைகளுக்குத் தேவையான துல்லியமான தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் இழப்புகள் பெருமளவில் குறைக்கப்படும்.

இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298819&reg=3&lang=1

***

SS/SE/SH

 


(रिलीज़ आईडी: 2299171) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी