பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
மிகவும் நலிவடைந்த பழங்குடியினர் சமூகத்தினருக்கான பிரதமரின் ஜன்மான் திட்டம் வலுப்படுத்தப்படுகிறது
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:03PM by PIB Chennai
நாட்டில் 18 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் 75 மிகவும் நலிவடைந்த பழங்குடியினர் சமூகத்தினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பிரதமரின் பழங்குடியினர் நீதிக்கான பெரும் இயக்கத்தை (பிஎம் ஜன்மான்) பிரதமர் தொடங்கியதாக பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே தெரிவித்தார். பாதுகாப்பான வீடு, தூய்மையான குடிநீர், கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, சாலை, தொலைத்தொடர்பு வசதி, மின்சாரம் இல்லாத வீடுகளில் மின்சார் வசதி நீடித்த வாழ்வாதார வாய்ப்புகள் போன்ற அவர்களுடைய சமூக பொருளாதார நிலைகளை மேம்படுத்துவதற்கு அடிப்படை வசதிகளை வழங்குவது இந்த இயக்கத்தின் நோக்கம் என்று அவர் கூறினார். 9 அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் 11 நடவடிக்கைகள் மூலம் இந்நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இந்த இயக்கத்தின் மூலம் பிரதமரின் கிராமப்புர வீட்டு வசதித்திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 30 வரை தமிழ்நாட்டில் 13,066 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதில், 9,541 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298797®=3&lang=1
***
SS/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2299156)
आगंतुक पटल : 6