விண்வெளித்துறை
விண்வெளிப் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:02PM by PIB Chennai
உள்நாட்டு தொழில், வர்த்தக மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடி-ன் ஸ்டார்ட்-அப் இந்தியா தளத்தின்படி , இந்தியாவில் சுமார் 440 விண்வெளி தொழில்நுட்ப புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன் - ஸ்பேஸ், பல்வேறு விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 52 அரசு சாரா நிறுவனங்களுக்கு 113 அங்கீகாரங்களை வழங்கியுள்ளது, அவற்றில் 18 நிறுவனங்கள் புத்தொழில் நிறுவனங்களாகும்.
விண்வெளிப் புத்தொழில் நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களையும் சேவைகளையும் அணுகுவதற்கு வசதியாக, இன் - ஸ்பேஸ் ஒரு டிஜிட்டல் தளத்தை நிறுவியுள்ளது. இந்தத் தளம், இந்தியாவின் விண்வெளி புத்தொழல் நிறுவனங்களின் வளர்ச்சியைச் சாத்தியமாக்கவும் ஆதரிக்கவும் ஒரு ஒற்றைச் சாளர இடைமுகமாகச் செயல்படுகிறது. இந்தத் தளத்தின் மூலம், விண்வெளிப் புத்தொழில் நிறுவனங்கள் அங்கீகாரம், நிதி வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்து, வழிகாட்டுதலைப் பெறலாம். இஸ்ரோ/இன் - ஸ்பேஸ் வசதிகளை அணுகி, தொழில்நுட்பப் பரிமாற்றத்தைப் பெற்றுத் திட்ட ஆதரவைப் பெறலாம், மேலும் திறன் மேம்பாடு, ஆற்றல் வளர்ப்புத் திட்டங்களிலும் பங்கேற்கலாம்.
விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (13.08.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298795®=3&lang=1
----
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2299142)
आगंतुक पटल : 7