பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மையப்படுத்தப்பட்ட குறை தீர்ப்பு அமைப்பின் செயல் திறன்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 1:26PM by PIB Chennai
சிபிஜிஆர்ஏஎம்எஸ் எனப்படும் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு கண்காணிப்பு அமைப்பின் இணையதளத்தில் பொது மக்களின் குறைகள் பெறப்பட்டு, தீர்வு காணப்படுகின்றன..
பொதுமக்களின் குறைகளைத் திறம்பட நிவர்த்தி செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் 23 ஆகஸ்ட் 2024 அன்று வெளியிடப்பட்டது. குறைகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு 21 நாட்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிபிஜிஆர்ஏஎம்எஸ்-ல் குறைதீர்ப்பு குறித்த மக்களின் திருப்தியை மதிப்பிடுவதற்காக, ஒரு பின்னூட்ட அழைப்பு மையம் ஜூலை 2022 முதல் செயல்பட்டு வருகிறது.
2025-26-ம் நிதியாண்டில் மத்திய அமைச்சகங்கள் துறைகளில் மொத்தம் 18,33,972 குறைகள் பெறப்பட்டு அவற்றில் 18,12,923-க்கு முழுமையாகத் தீர்வு காணப்பட்டுள்ளது.
பணியாளர் நலன், பொது மக்கள் குறைதீர்ப்பு, நிர்வாக சீர்திருத்தங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (13.08.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298781®=3&lang=1
----
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2299130)
आगंतुक पटल : 6