புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காலநிலை சவால்களை எதிர்கொள்ளவும் வானிலை முன்னறிவிப்புகளை மேம்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை

प्रविष्टि तिथि: 13 AUG 2026 2:14PM by PIB Chennai

காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் நாட்டின் தகவமைப்புத் திறனை மேம்படுத்தவும், வானிலை முன்னறிவிப்புகளைத் துல்லியமாக வழங்கவும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம் பல்வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பிற்காக, இந்திய தேசிய பெருங்கடல்  மையம் சார்பாக தமிழ்நாடு, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் அனைத்துக் கடலோரப் பகுதிகளுக்கும் 'கடலோரப் பாதிப்புச் சுட்டெண்' மற்றும் பல்வகை அபாயப் பாதிப்பு வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வானிலைத் தகவல்களை உடனுக்குடன் வழங்க 'மௌசம்', 'மேகதூத்', 'டாமினி', 'சமுத்ரா' ஆகிய மொபைல் செயலிகளும், 'சசேத்'  தளமும் செயல்படுகின்றன. மேலும், 'பஞ்சாயத்து மௌசம் சேவா' மூலம் பஞ்சாயத்துப் பிரதிநிதிகளுக்கு வாட்ஸ்அப் வாயிலாகவும், விவசாயிகளுக்குக் 'கிருஷி சாகி' அமைப்புகள் மூலமாகவும் வானிலை ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

'மிஷன் மௌசம்' திட்டத்தின்கீழ் 2030-ஆம் ஆண்டிற்குள் வானிலை முன்னறிவிப்பின் துல்லியத்தை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தவும், நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் பேரிடர் எச்சரிக்கைகளைச் சென்றடையச் செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298812&reg=3&lang=1

****

TV/SE/SH


(रिलीज़ आईडी: 2299127) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी