PIB Backgrounder
இளைஞர்களுக்கு அதிகாரமளித்து, இந்தியாவை முன்னேற்றுதல்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 1:18PM by PIB Chennai
உலகின் மிகப்பெரிய இளைஞர் சமுதாயத்தைக் கொண்டுள்ள இந்தியாவில், 35 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 65 சதவீதமாக உள்ளனர். இந்த மக்கள்தொகையை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, விளையாட்டு, சுகாதாரம் ஆகிய துறைகளில் மத்திய அரசு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய தொடர்ச்சியான ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் நாட்டின் இளைய தலைமுறையினர் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்து வருகின்றனர்.
இளைஞர்களை மையப்படுத்திய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் தொடங்கப்பட்ட 'எனது இளைய பாரதம்' (மை பாரத்) தளம், இணையவழியில் தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அனுபவக் கற்றல், தலைமைப் பண்பு, திறன் வளர்ப்பு, வாழ்வாதார ஆதரவு ஆகியவை சார்ந்த நடவடிக்கைகளை ஒற்றைக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்துள்ளது. இத்தளத்தில் ஜூலை 2026 நிலவரப்படி கோடிக்கணக்கான இளைஞர்கள் பதிவு செய்து சமூகப் பணிகள், பொதுநலத் திட்டங்களில் தீவிரமாகப் பங்களித்து வருகின்றனர். ‘தேசிய கல்விக் கொள்கை 2020’ மாணவர்களை மையமாகக் கொண்டு பள்ளி கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றைத் இணைத்து எதிர்காலத்திற்குத் தேவையான நவீனக் கற்றல் சூழலை உருவாக்கியுள்ளது.
உயர்கல்வித் துறையில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் பெருமளவில் அதிகரித்துள்ளதோடு, ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற உயர்தரக் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய கடன் கட்டமைப்பு, கல்வி சார்ந்த கடன்கள் போன்ற நவீன டிஜிட்டல் முறைகள் மூலம் மாணவர்கள் தங்களது கல்வித் தரவுகளை எளிதாகச் சேமிக்கவும் பரிமாறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஸ்வயம், தீட்சா போன்ற இணையதளக் கல்வித் தளங்கள் மூலம் கோடிக்கணக்கான மாணவர்கள் தங்களது கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்து சான்றிதார்களைப் பெற்று வருகின்றனர்.
திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இந்தியாவில் வேலையின்மை விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளதோடு, நாட்டின் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தாக்கச் சூழல் அமைப்பாக உயர்ந்துள்ளது. பிரதமரின் உள்ளகப் பயிற்சித் திட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்குப் முன்னணி நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
விளையாட்டுத் துறையில் கிராமப்புற இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து உயர்தரப் பயிற்சி அளிக்கப்படுவதால் சர்வதேசப் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வருகின்றனர். கேலோ இந்தியா திட்டம், ஒலிம்பிக் மேடை இலக்குத் திட்டம் போன்ற முன்முயற்சிகள் இளம் வீரர்களுக்குத் தேவையான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் நிதியுதவியையும் வழங்கி வருகின்றன. பதின்பருவத்தினருக்கான சிறப்பு சுகாதாரக் கட்டமைப்புகள், மனநல ஆலோசனை வழங்கும் டெலி-மானஸ் சேவை, போதைப்பொருள் தடுப்பு இயக்கங்கள் மூலம் நாட்டின் இளைய சமுதாயத்தின் உடல்நலமும் மனநலமும் பாதுகாக்கப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு துறை சார்ந்த முதலீடுகள் மூலமாக நாட்டின் இளைஞர்கள் நுகர்வோராக மட்டுமல்லாமல் படைப்பாளர்களாக உயர்ந்து இந்தியாவை வலிமைமிக்க நாடாக மாற்றி வருகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298773®=3&lang=1
***
TV/PD/KR
(रिलीज़ आईडी: 2299026)
आगंतुक पटल : 11