மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
நாடாளுமன்றக் கேள்வி: பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு விதிமுறைகள், 2025
प्रविष्टि तिथि:
12 AUG 2026 6:34PM by PIB Chennai
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் பிற கல்விசார் பணியாளர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்சத் தகுதிகள் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிமுறைகள் 6.1.2025 அன்று யுஜிசியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. மேலும், அனைத்து மாநிலங்களின் உயர்கல்வித் துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், மாநில உயர்கல்வி மன்றங்கள், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் அலுவலகங்கள், ஐஐடி-கள், ஐஐஎம்-கள், ஐஐஎஸ்இஆர்-கள், ஐஐஎஸ்சி மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்தும் யுஜிசி கருத்துகளைக் கோரியது.
விதிமுறைகளுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து விரிவான கருத்துகளைப் பெறுவதற்கான கலந்தாலோசனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள யுஜிசி முடிவு செய்துள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் உட்பட, முன்மொழியப்பட்ட விதிமுறைகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு கருத்துகளையும், விதிமுறைகளை இறுதி செய்யும் செயல்முறையின் ஒரு முக்கிய அங்கமாக முறையாகப் பரிசீலிப்பதை உறுதி செய்வதே இந்த அணுகுமுறையின் நோக்கமாகும்.
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்த மஜும்தார் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298506®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2298674)
आगंतुक पटल : 11