ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளத் துறை செயலாளராக திருமதி அர்ச்சனா வர்மா பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 12 AUG 2026 7:19PM by PIB Chennai

மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதிகள் மேம்பாடு, கங்கை புத்துயிரூட்டல் துறைச் செயலாளராக திருமதி அர்ச்சனா வர்மா இன்று (2026 ஆகஸ்ட் 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.

1995-ம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த அஸ்ஸாம் மாநிலப் பிரிவின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், இதற்கு முன்னர் மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் மற்றும் பணியாளர் & பயிற்சித் துறையில் பணியாற்றியதுடன், மத்திய அரசில் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்துள்ளார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிய இவர், தில்லி அரசில் ஊழல் விழிப்புணர்வு விவகாரங்கள், ஆணையக் கொள்கைகள் சார்ந்த பணிகளைக் கவனித்து வந்தார். 2022 செப்டம்பர் மாதத்தில் ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய தண்ணீர் இயக்கத்தின் இயக்குநராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவராவார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298538&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2298639) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी