பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் பழங்குடியினர் உன்னத கிராமத் திட்டத்தின் கீழ் பழங்குடியின கிராமங்களின் வளர்ச்சி

प्रविष्टि तिथि: 12 AUG 2026 12:45PM by PIB Chennai

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடந்த 2024 அக்டோபர் 2-ல் தொடங்கப்பட்ட 'பிரதமரின் பழங்குடியினர் உன்னத கிராமத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 549 மாவட்டங்கள் மற்றும் 2,911 வட்டங்களில் உள்ள 63,843 கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் 5 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் பயனடைவர்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள முக்கியப் பணிகளில், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 13,02,811 வீடுகள் அனுமதிக்கப்பட்டு, 8,21,566 வீடுகள் கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. மேலும், ஜல் ஜீவன் இயக்கம் மூலம் 29,497 கிராமங்கள் பலன் பெற்றுள்ளதுடன், 2,87,761 வீடுகள், பொது நிறுவனங்களுக்கு மின் வசதியும், 14 மாநிலங்களில் 5,008 கி.மீ சாலைப் பணிகளும் 3,777 கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகளும் எட்டப்பட்டுள்ளன.

இத்தகவலை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. துர்காதாஸ் உய்கே மாநிலங்களவையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298082&reg=3&lang=1

*** 

SS/EA/SH


(रिलीज़ आईडी: 2298607) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी