புவி அறிவியல் அமைச்சகம்
வானிலை முன்னறிவிப்பில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த நடவடிக்கை: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்
प्रविष्टि तिथि:
12 AUG 2026 12:40PM by PIB Chennai
தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளைத் துல்லியமாகவும் உரிய நேரத்திலும் வழங்குவதற்காகச் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் தொழில்நுட்பங்களை அரசு பயன்படுத்தி வருவதாக மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அவர், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இடைக்கால வானிலை முன்னறிவிப்பு மையமானது செயற்கை நுண்ணறிவு முறைகளைத் வழக்கமாக பயன்படுத்தப்படும் வானிலை மாதிரிகளுடன் இணைத்துச் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் பிரத்யேகக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பெருநகரங்களுக்கான மழைப்பொழிவு கணக்கீட்டு முறைகளும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளும் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பருவமழைத் தொடக்கம் குறித்த எச்சரிக்கைகளை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்க ஏதுவாகச் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கலப்பின முறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாகப் பதினைந்து மாநிலங்களில் உள்ள சுமார் ஐந்து கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பிராந்திய மொழிகளில் வானிலை எச்சரிக்கைகளை வழங்குவதற்காகப் பெருமொழி மாதிரிகள் (எல்எல்எம்) உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக, தேசிய அளவிலான ஒருங்கிணைக்கப்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கை தளம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298074®=3&lang=1
----
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2298550)
आगंतुक पटल : 11