புவி அறிவியல் அமைச்சகம்
சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடலில் இருந்து பலவுலோகக் கட்டிகளை சேகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது
प्रविष्टि तिथि:
12 AUG 2026 12:39PM by PIB Chennai
மத்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், சென்னையில் செயல்படும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆழ்கடலில் இருந்து பலவுலோகக் கட்டிகளை நம்பகமான, நீடித்த முறையில் சேகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கென, கடலடி சுரங்க அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடலஅடி ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட மத்திய இந்தியப் பெருங்கடல் படுகையில் 5,270 மீட்டர் ஆழத்தில் இந்த அமைப்பின் செயல்பாடு குறித்த சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்றன. அத்துடன், சர்வதேச கடலடி ஆணையத்தின் வழிகாட்டுதலுக்கேற்ப இந்தக் கட்டிகளைச் சேகரிக்கக் கூடிய, நொறுக்கக் கூடிய உபகரணங்களை உருவாக்கும் பணியில் தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், பலவுலோகக் கட்டிகள், உலோகச் சல்ஃபைடுகள் போன்ற கடலுக்கு அடியிலுள்ள கனிமங்களை ஆய்வு செய்ய புவி அறிவியல் அமைச்சகம் சர்வதேச கடலடி ஆணையத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆணையம் நிர்ணயித்துள்ள ஒப்பந்தக் கடமைகள், வழிகாட்டுதல்களின்படி, வள மதிப்பீடு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இத்தகவலை, மத்தியப் புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298073®=3&lang=1
***
SS/IR/SU/KR
(रिलीज़ आईडी: 2298421)
आगंतुक पटल : 17