விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் முறையிலான பொதுப் பயிர் மதிப்பீட்டுக் கணக்கெடுப்பு

प्रविष्टि तिथि: 11 AUG 2026 4:39PM by PIB Chennai

டிஜிட்டல் முறையிலான பொதுப் பயிர் மதிப்பீட்டுக் கணக்கெடுப்புத்  திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது 2023-24 ஆண்டு காரீஃப் பருவத்தில் 10 மாநிலங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாகத் தொடங்கப்பட்டது. இந்த நடைமுறை வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, 2023-24 ரபி பருவத்தில் இத்திட்டம் 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, மொத்தம் 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய படிப்படியான விரிவாக்க நடைமுறைகள் மூலம், நாடு முழுவதும் பயிர் விளைச்சல் மதிப்பீட்டின் வரம்பு, வெளிப்படைத்தன்மை, பருவத்திற்குள் பயிர் செய்தல், தரம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம், பயிர் மதிப்பீட்டிற்கான டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது.

பயிர் அறுவடைச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதில், இந்த நடைமுறை பல்வேறு முக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது மொபைல் செயலி மூலம் நிகழ்நேரத் தரவுப் பதிவை மேற்கொண்டு, முழுமையான டிஜிட்டல், காகிதப் பயன்பாடற்ற பணிச் செயல்முறையைச் சாத்தியமாக்குகிறது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையை அதிகரிக்க, இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறையில்  புவிசார் குறியிடுதல், நேர முத்திரையிடல், அங்கீகரிக்கப்பட்ட புகைப்படச் சான்றுகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது மாநிலங்கள் முழுவதும், தரவு சேகரிப்பு, சரிபார்ப்பு நடைமுறைகளைச் சீராக்குகிறது. இதன் மூலம், பயிர் விளைச்சல் மதிப்பீடுகளின் துல்லியம், நம்பகத்தன்மை, சீரான தன்மை, குறித்த காலத்திற்குள் பயிர் செய்தல் ஆகியவை மேம்படுகின்றன. இணையம் சார்ந்த தகவல் பலகைகள் மூலம், இந்த கணக்கெடுப்பு முறை ஆன்லைன் கண்காணிப்பு, மேற்பார்வையை எளிதாக்குகிறது. இது பயிர் விளைச்சல் மதிப்பீட்டுத் தரவுகளை விரைவாகச் செயலாக்கவும், தொகுக்கவும் வகை செய்கிறது.

இந்த கணக்கெடுப்பின் செயலாக்கம் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அரசுகளின் தயார்நிலை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதி, களப்பணியாளர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், அவர்களுடன் கலந்தாலோசித்து இத்திட்டத்தின் விரிவாக்கம் படிப்படியாக முன்னெடுக்கப்படுகிறது.

மத்திய வேளாண்துறை இணையமைச்சர் திரு. ராம்நாத் தாக்கூர் இன்று மக்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத்  தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297658&reg=3&lang=1

(Release ID: 2297658)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2297993) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu