ஊரக வளர்ச்சி அமைச்சகம்
கிராமப்புற உட்கட்டமைப்பிற்கான ஒருங்கிணைந்த பெருந்திட்டம்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 6:00PM by PIB Chennai
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், தனது விரிவான கொள்கை கட்டமைப்பின் கீழ், நாட்டின் ஊரகப் பகுதிகளின் ஒருங்கிணைந்த மற்றும் நிலையான வளர்ச்சிக்காகப் பல்வேறு இலக்கு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு, வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி, பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம், வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் மற்றும் தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்– தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன.
திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான கட்டமைப்பின்படி, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் உண்மையான தேவைகளைக் கருத்தில் கொண்டு, மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பல்வேறு திட்ட முன்மொழிவுகளைத் தயாரித்து வருகின்றன. நாட்டில் கிராமப்புற மேம்பாட்டின் வேகத்தை அதிகரிக்க, இந்தத் திட்டங்கள் பல்வேறு மத்திய மற்றும் மாநிலத் திட்டங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஒரு ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தை உருவாக்குவது குறித்த எந்த முன்மொழிவும் தற்போது அமைச்சகத்திடம் இல்லை.
ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கம்லேஷ் பாஸ்வான் இன்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297780®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2297991)
आगंतुक पटल : 11