ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஊரக மேம்பாட்டுத் திட்டங்களின் செயலாக்கம்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 5:58PM by PIB Chennai
வரையறுக்கப்பட்ட நோக்கங்களைச் அடைவதை உறுதிசெய்யும் வகையில், ஊரக மேம்பாட்டுத் திட்டங்களின் செயலாக்க முன்னேற்றத்தை அரசு தொடர்ந்து மதிப்பீடு செய்து ஆய்வு செய்கிறது. அந்த வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2006-ல் தொடங்கப்பட்டதிலிருந்து, 30.06.2026 நிலவரப்படி மொத்தம் 4.17 கோடி மனித-நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2011-ல் தொடங்கப்பட்ட தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்- தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம், 30.06.2026 வரை மொத்தம் 10.08 கோடி பெண்கள் 92 லட்சம் சுய உதவிக் குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2016 முதல் தற்போது வரை மொத்தம் 3.11 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
2026 ஜூலை 1 அமலுக்கு வந்த வளர்ச்சியடைந்த இந்தியா - ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கச் சட்டம் 2025, விருப்பமுள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பத்திற்கும் 125 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பிற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வழங்குகிறது. மேலும், நீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள், நீர் வளங்களின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் வேளாண் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன், கிராமப்புற வாழ்வாதாரங்களில் பங்களிக்கின்றன.
ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கம்லேஷ் பாஸ்வான் இன்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297777®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2297985)
आगंतुक पटल : 15