மருந்துகள் துறை
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தில் மக்கள் மருந்தகங்கள் விரிவாக்கம்: மத்திய அரசு விளக்கம்

प्रविष्टि तिथि: 11 AUG 2026 3:03PM by PIB Chennai

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் திட்டம் மூலம் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக 469 மக்கள் மருந்தகங்களை விரிவுபடுத்துவது தொடர்பாக மாநில அரசிடமிருந்து எந்தவிதமான பரிந்துரைகளும் பெறப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜூன் 30, 2026 நிலவரப்படி, மேற்கு வங்கம் முழுவதும் மொத்தம் 1,014 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தின் மொத்தமுள்ள 345 வட்டங்களில், 217 வட்டங்களில் 715 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேசமயம், மீதமுள்ள 128 வட்டங்களில் இதுவரை மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297564&reg=3&lang=1

****

TV/EA/SH

 


(रिलीज़ आईडी: 2297943) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali