மருந்துகள் துறை
நாடு முழுவதும் இதுவரை 20,149 பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன: மத்திய அரசு தகவல்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 3:07PM by PIB Chennai
பிரதமரின் பாரத மக்கள் மருந்தகத் திட்டத்தின் கீழ் 2026 ஜூன் 30 வரை நாடு முழுவதும் 20,149 மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில், கேரளாவில் 1833 மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மருந்து பொருட்களின் பட்டியலில் 2110 மருந்துகளும், 315 அறுவை சிகிச்சை உபகரணங்கள், மருத்துவப் பயன்பாட்டுப் பொருட்கள், கருவிகள் உள்ளன. அவை இதய நோய், புற்றுநோய், நீரிழிவு, தொற்று எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, இரைப்பை குடல் சார்ந்த நோய்களுக்கான மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் உட்பட அனைத்து முக்கிய மருந்து பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், நாடு முழுவதும் பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் மூலம் ரூ.7873.85 கோடி மதிப்பிலான விற்பனை நடைபெற்றுள்ளது. இதனால், மக்களுக்கு சுமார் ரூ.37200 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது.
www.janaushadhi.gov.in என்ற இணையதளம் வாயிலாக தனிப்பட்ட தொழில்முனைவோர், அரசு சாரா நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை மக்கள் மருந்தகங்களை திறக்க விண்ணப்பிக்கலாம்.
இத்தகவலை மத்திய ரசாயனம், உரங்கள் துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297568®=3&lang=1
****
TV/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2297912)
आगंतुक पटल : 9