ஜவுளித்துறை அமைச்சகம்
ஜவுளித் துறையில், புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதி ஒதுக்கீடு
प्रविष्टि तिथि:
11 AUG 2026 1:41PM by PIB Chennai
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் தேசிய தொழில்நுட்ப ஜவுளித் திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப ஜவுளித் துறையில், ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர்களுக்கான ஆராய்ச்சி, தொழில்முனைவோருக்கான மானியம் (கிரேட்) என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம், தெலங்கானா உட்பட நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப ஜவுளித் துறையில், புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பிற்கு ஆதரவு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இளம் கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனங்கள் தங்களது யோசனைகளை வணிக ரீதியான தொழில்நுட்பங்கள், தயாரிப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான உதவிகளை இது வழங்குகிறது.
நடப்பு நிதியாண்டிற்கான (2026-27) தேசிய ஜவுளி தொழில்நுட்ப இயக்கத்தின் மொத்த பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.256 கோடியாகும். இதில் கிரேட் திட்டத்தின் கீழ், புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதற்கான ஒதுக்கீடும் அடங்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ், தெலங்கானா மாநிலத்திலிருந்து 15 ஆராய்ச்சித் திட்டங்களும், இந்தியாவில் தொழில்நுட்ப ஜவுளிக் கல்வியில், கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதற்கான பொது வழிகாட்டுதலின் (தனியார், பொது நிறுவனங்களுக்கு) கீழ் ஒரு கல்வி நிறுவனத்தின் விண்ணப்பமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இன்று மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297519®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2297899)
आगंतुक पटल : 9