ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் குறித்த விவரங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 11 AUG 2026 1:30PM by PIB Chennai

தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட தறிகள்,  உபகரணங்கள், பணிமனைகள் அமைத்தல், விளக்கு அமைப்புகள், தயாரிப்பு, வடிவமைப்பு மேம்பாடு போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்குத் தேவைக்கேற்ப நிதி உதவி வழங்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட தறிகள், உபகரணங்கள், கட்டி முடிக்கப்பட்டுள்ள  பணிமனைகள், வழங்கப்பட்ட விளக்கு அமைப்புகள் குறித்த மாநில / யூனியன் பிரதேச வாரியான விவரங்களை மத்திய ஜவுளி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கைத்தறி நெசவாளர்களை தொழில்முறை ரீதியாக நிர்வகிக்கப்படும்,  உறுப்பினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களாக ஒருங்கிணைப்பதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக, கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குவது, வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 2020-21 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில், தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 237 கைத்தறி உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சலுகை வட்டியுடன் கூடிய கடன் / நெசவாளர் முத்ரா திட்டம் என்பது தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு அங்கமாகும். இத்திட்டம், நாடு முழுவதும் உள்ள கைத்தறித் துறைக்குத் தேவையான காலமுறை சார்ந்த கடனுதவி, செயல்பாட்டு மூலதனம் ஆகியவற்றுக்கான கடன் தேவைகளை நெகிழ்வுத்தன்மையுடன், குறைந்த செலவில் பூர்த்தி செய்ய, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து சரியான தருணத்தில் போதிய உதவிகளைப் பெற உதவுகிறது.

இதன்படி, நாட்டில், மேம்படுத்தப்பட்ட தறிகள், உபகரணங்களின் எண்ணிக்கை 6,577-ஆகவும், தனிப்பட்ட பணிமனைகளின் எண்ணிக்கை 618-ஆகவும், விளக்கு அமைப்புகளின் எண்ணிக்கை 428-ஆகவும் உள்ளது.

மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இன்று மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297505&reg=3&lang=1

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2297895) வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी