ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளித்துறை மேம்பாட்டிற்கானத் திட்டங்கள், முதலீடுகள்

प्रविष्टि तिथि: 11 AUG 2026 1:33PM by PIB Chennai

பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம்ஆயத்த ஆடை பூங்கா (பிஎம் மித்ரா) திட்டம்இத்துறையில் முதலீடுவேலைவாய்ப்பு,  ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில்நாட்டில் உள்ள ஏழு மாநிலங்களில்உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த ஜவுளி உற்பத்தி மையங்களை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முயற்சியாகும்.

இத்திட்டம் 2021-22 முதல் 2027-28 வரையிலான காலகட்டத்தில்ரூ. 4,445 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த ஜவுளி மையங்கள்பண்ணை முதல் இழை வரைதொழிற்சாலை முதல் நவநாகரீக ஆடைகள்வெளிநாடு வரை என்ற ஐந்து அம்சத் தொலைநோக்குப் பார்வையை அடிப்படையாகக் கொண்டவையாகும். மேலும்இவை நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன்நூல் நூற்பு முதல் ஆடை தயாரிப்பு வரையிலானமுழுமையான செயல்பாடுகளை  மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தமிழ்நாடுதெலங்கானாகுஜராத்கர்நாடகாமத்தியப் பிரதேசம்உத்தரப் பிரதேசம்மகாராஷ்டிரா ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு மாநிலங்களில் இந்த ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்கள் அமைந்துள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ்மேம்படுத்தப்பட்ட தொழிற்சாலை அமைப்பதற்கான இடங்கள்பிளக்-அண்ட்-பிளே எனப்படும் உடனடி பயன்பாட்டிற்கான வசதிகள்இன்குபேஷன் மையங்கள்சாலைகள்மின்சாரம்நீர்கழிவுநீர் அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகளையும்பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்தொழிலாளர் விடுதிகள்குடியிருப்புகள்சரக்குப் போக்குவரத்திற்கான கட்டமைப்புகள்,  கிடங்குகள்மருத்துவ வசதிகள்பயிற்சிதிறன் மேம்பாட்டு வசதிகள் உள்ளிட்ட துணை உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது.

தற்போதுஅனைத்து மாநிலங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதுடன், 100% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஜவுளிப் பூங்காக் கட்டுமானப் பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளன.

மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்ரிட்டா இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில்இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297507&reg=3&lang=1

***

SS/SV/SH

 


(रिलीज़ आईडी: 2297892) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी