விவசாயத்துறை அமைச்சகம்
காரீஃப் பருவப் பயிர்கள் சாகுபடிப் பரப்பளவு நிலவரம்: மத்திய அரசு வெளியீடு
प्रविष्टि तिथि:
11 AUG 2026 1:30PM by PIB Chennai
2026 ஆகஸ்ட் 07 வரையில் நாட்டின் காரீஃப் பருவப் பயிர்கள் சாகுபடி பரப்பளவு தொடர்பான விவரங்களை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அரிசி சாகுபடி பரப்பளவு 344.78 லட்சம் ஹெக்டேராகப் பதிவாகியுள்ளது. பருப்பு வகைகள் மொத்தமாக 103.78 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. இதில் துவரை 37.53 லட்சம் ஹெக்டேர், உளுந்து 22.86 லட்சம் ஹெக்டேர், பாசிப்பயறு 31.37 லட்சம் ஹெக்டேர், கொள்ளு 0.18 லட்சம் ஹெக்டேர், நரிப்பயறு 8.80 லட்சம் ஹெக்டேர், இதர பருப்பு வகைகள் 3.03 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீ அன்னம் எனப்படும் சிறுதானியங்கள், தானிய வகைகள் 168.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. இதில் சோளம் 12.82 லட்சம் ஹெக்டேர், கம்பு 62.44 லட்சம் ஹெக்டேர், கேழ்வரகு 2.80 லட்சம் ஹெக்டேர், சிறிய சிறுதானியங்கள் 3.30 லட்சம் ஹெக்டேர், மக்காச்சோளம் 87.15 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
எண்ணெய் வித்துக்கள் மொத்தமாக 180.20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. இதில் நிலக்கடலை 46.82 லட்சம் ஹெக்டேர், சோயாபீன் 119.92 லட்சம் ஹெக்டேர், சூரியகாந்தி 1.01 லட்சம் ஹெக்டேர், எள் 9.96 லட்சம் ஹெக்டேர், ஆமணக்கு 2.27 லட்சம் ஹெக்டேர், இதர எண்ணெய் வித்துக்கள் 0.10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன.
வணிகப் பயிர்களைப் பொறுத்தவரையில், கரும்பு 58.31 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும், சணல் & மெஸ்தா ஆகியவை 6.34 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும், பருத்தி 106.01 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக காரீஃப் பருவத்தில் 967.92 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297504®=3&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2297876)
आगंतुक पटल : 13